Monday, August 27, 2012

ரெயில்ஸ் பிரயாணம்


ஹலோ தொஸ்து,

ரொம்ப  நாள் லீவ் எடுதுகிணன் பா,
சாரி பா,
கிளௌட் கொம்புடிங் யை பற்றி பார்க்கலாம் ...
கிளௌட் பற்றி தமிழ் வார்த்தை யோசித்தால்  'வானம் மப்பா இருக்கு ', 'வானம் மேகமுட்டமா  இருக்கு ' ஏன்னு  நியாபகம்   வருது ..
'மப்பு ','மேகமுட்டம்' என்னும் சொல்லுல 'மப்பு' என்பதுக்கு நேர் சொல்லாக   'கிளௌட்' இன்னு  அர்த்தம் புரிந்துக்கொண்டு இந்த கட்டுரையில்  படிக்கவும்.

html , ஜாவஸ்க்ரிப்ட்,php ,mysql  டெக்னாலஜியில் நாட்டம் உள்ளவர்கள்ளுக்கு  இனி படிக்க  எளிமையாக  இருக்கும் ..
குட்டி குட்டி வெப்சைட் , static  வெப் சைட் செஞ்சு ஒரு 1200 ருபாய் செலவுலே ஹோஸ்ட் பண்ண தொஸ்துகளுக்கு
நான்  சொல்லும் விசையம் இன்டரஸ்டிங்க இருக்கும்  என்ன நம்பிக்கை உடன் இந்த ஸ்டோரி சொல்ல ஆரம்ப்பிகிறேன் ... .

கந்த சாமிதான் நம்ப கதா நாயகன்.
நம்ம கதா நாயகன் படாத கஷ்டபட்டு   மன்னாரன் கம்பெனில   ஒரு வேளையில்  சேர்ந்தான் ..
கம்பெனியில் வழக்கமா வேலை  ..
எக்ஸ்போர்ட்ஸ் அண்ட் இம்போர்ட்ஸ் , அதாவது  
 பார்மட் மாற்றம் ( ogv டு  அதர் formats   )  தினமும் கம்பெனில நடக்கும் :).
நம்ம கதாநாயகன் கந்தசாமியின் வேலை ,ஆபீஸ்ல அரட்டை அடிப்பத்துடன் , html  templates ரெடி பண்ணறது , designer  கூட discussion பண்ணி (சண்டை போட்டு) ஒரு டிசைனை  கஸ்டமர் கிட்ட ஒகே வாங்கி , அப்ளிகேஷேன் develop செஞ்சி டெஸ்ட் பண்ணி ( ;) ),டேப்லாய் பண்ணி கஸ்டமர கையில  வெச்சிருப்பது தான்..

சும்மா தமிழ் பட ஹீரோ டைரக்டர்  T  R மாதரி  :) .

நம்ப ஹீரோக்கு  dreamhost  godaddy  போன்ற கம்பனில்ல shared  account  வாங்கி  ஒரு அப்ளிகேசன் ஹோஸ்ட் பண்ண தெரியும்.

நம்ம ஹீரோவை பாஸ் கூப்பிட்டு  ஒரு வேலை சொன்னார் ..
பாஸ் பேரு ஆதி கேசவன் , நல்ல டெக்னாலஜி ஞானம் கொண்ட மனுஷன்.
கந்தா , நம்மக்கு ஒரு வேலை வந்து இருக்கு.
ஒரு வெப்  அப்ளிகேஷேன் செய்யணும் .
1 ) உலகத்தில் உள்ள அணைத்து பார்ல என்ன என்ன சரக்கு வெச்சு  இருக்காங்கே ஏன்னு யுசர்க்கு   தெரியனும் ..
2 ) எந்த எந்த பாரில்ல ஹாப்பி ஹெர்ஸ் (happy  hours  )இன்னு  அப்ளிகேஷேன் சொல்லனம்!
3) எல்லா பிரபலமான டிவைச்ளையும் வேலை செய்யணும் .(android , iphone ,மொபைல் போன்,டெஸ்க்டாப் , லேப்டாப்)....
4 )  யூசர்  இருக்கும் இடத்தை வைத்து கொண்டு பக்கத்தில் உள்ள பார் பற்றி தகவல்லை சொல்வது... பாரைப்   பற்றி  ரேடிங், கமெண்ட்ஸ் சொல்லுவது..

இந்த வேலைகளை பிருச்சி மேயுரத்தை   ஆங்கிலத்தில் 'ச்ப்ரின்ட்' (sprint) இன்னு  சொல்லுறாங்க ... ஆதியின் அறிவு கோடோவ்னில்  ஐடியா வரவைத்து  நாம ஹீரெக்கு சொல்லிதறாரு,

கந்தா , இது வரைக்கும் நீ ஹோஸ்ட் பண்ண shared  host  accountilla சில பல தில்லாலங்கடி  வேலை செய்தாலும் சரியாக  requirementai செய்ய முடியாது . காரணம்
உதரணத்துக்கு
ஒரு ஒரு ஊரிலையும் அவங்கே அவங்கே மொழில வெப்சைட் டெலிவரி  தரனும்..
ஒவ்வொரு  feature  களையும் add  பண்ண பண்ண presentation area தெளிவாக எழுதப்பட வேண்டும் .
கூடியமட்டும்   தெளிவான  பாதையில் பிரயாணம் செய்யவேண்டும் .
இதுக்கு மேல இந்த projectlla  சொல்ல முடியாத இன்னும் கண்டுஅரியாத feature கள்   உண்டு..
சும்மா நினைச்சி  பாரு ,
உலகத்தில்  உள்ள குடிமக்கள்  எல்லாம் ஒரே நாள்ளுல ,..
ஆன்லைன் முலம் கூடுராங்க ...
நம்ப shared  account  அன்னைக்கி 'நிக்குமோ  நிக்கதோ  ' ஏன்னு பிரத்தனை பண்ணி இருக்க முடியாது..
ஒரு சர்வர் ஊத்திகின்னாலும்  இன்னொரு சர்வர் மூலம் வெப் சைட் சும்மா கிண்ணுனு வேலை செய்யணும்..
இந்த மாத்ரி தேவைக்கு  VPS  அக்கௌன்ட் தேவை ..
VPS  பத்தி lighta இண்டர்நேட்ல  படித்து  வா !!..
பொறுப்புடன் சொன்னார் ஆதி..

நாளைக்கு VPS  accountilla  ரெயில்ஸ் வெப் சர்வர்ஐ   நிறுவனம் ஏன்னு  சொல்லிட்டு அலுவலகத்தில் இருந்து இருவரும்  கிளம்பினார்கள் ...

நாளைக்கு சந்திப்போமா!!!...
பிழை திருத்தம் : நன்றி தஸ்தகீர் :).

Sunday, July 25, 2010

ரூபி ஆன் ரெயில்ஸ் ஐ நிறுவ செய்ய வேண்டியவைகள்

அன்பு இளவல்களே !!

வணக்கம் ,

இணையம் எப்படி வேலை செய்கிறது .. இது பற்றி மணிகண்டன் எழுதிய வலைதளத்தை பாருங்கள் ..
வலை விலாசம் : http://www.andhimazhai.com/news/viewmore.php?id=7246

ரூபி ஆன் ரெயில்ஸ் ஐ நிறுவ செய்ய வேண்டியவைகள்
இந்த வலை பதிவில் உள்ள வழி முறைகள் உபுண்டு 10.04 ஐ சார்ந்தது ...

ஒப்பன் எஸ்.எஸ்.எல் என்பது இணைய தளங்கள் மற்றும் இணையகதிற்கான தகவல் பரிமாற்றத்தை செய்ய பயன்படுத்தப்படும் சங்கேத மொழி. சர்வரில் இருந்து தகவல்கள் சிறு சிறு துண்டுகளாக மாற்ற படுகிறது. பின்பு அத்தகவல்கள் எளிதில் அறிய முடியாதவாறு கிரிப்டோ கிராபியின் (cryptography) மூலமாக உரு மாற்றம் அடைந்து இணைய பயன்பாட்டாளரை(client) வந்து அடைகிறது. பயன்பாட்டளர் தரும் தகவல்களும் இவ்வாறு மந்திர மொழிகளாக சர்வரை சென்று அடைகிறது.ஒப்பன் எஸ்.எஸ்.எல் 'C ' மென் மொழில் எழுதப்பட்ட ஒரு மென்பொருள் . ரூபியில் இந்த மென்பொருளை பயன்படுத்த இணைப்பு மென்பொருள் தான் 'libopenssl-ruby1.8'.

உடனுக்கு உடன் ரூபி கட்டளைகளை அறிய பயன்பெரும் மென்பொருள்தான் irb.ரூபி மற்றும் ரூபி-டேவ் (ruby and ruby-dev) மாரலியர்க்கான ரூபி மென்பொருட்கள் .
ரூபியின் கட்டளைகளை பற்றி அறிய உதவும் உரை(documentation) தான் ஆர் ஐ (ri ) மற்றும் ஆர் டாக் (rdoc).

இவைகளை நாம் நிறுவ தரவேண்டிய கட்டளைகள்

நிலை 1 :
$sudo apt-get install ruby ruby-dev libopenssl-ruby1.8 irb ri rdoc
இதன் பின் உங்கள் கடவு சொல்லை கணினி கேட்கும் .. அதை விசை பலகையில் அடியுங்கள் ..

நிலை 2 :
உங்கள் கண்ணினியில் முன்பே மை எஸ்க்யுஎல் (mysql ) நிறுவ பெற்றுருந்தால் நீங்கள் தரவேண்டிய கட்டளை
$sudo apt-get install libmysql-ruby sqlite3

ஒரு வேலை கணினியில் மை எஸ்க்யுஎல் (mysql ) நிறுவாமல் இருந்தால்
$ sudo apt-get install mysql-server sqlite3 libmysql-ruby

மை எஸ்க்யுஎல் (mysql ) நிறுவுகையில் முதன் முறையாக பயனர் பெயர் ,கடவு சொல் , சர்வரின் பெயர் கேட்கப்படும் , இவைகளை இணையத்தில் உள்ள உரைகளின் உதவியுடன் நிறுவவும், ஏதானும் ஐயதிற்கு எம்மை citizenofgnu@gmail.com என்ற மின் அஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளலாம்.

நிலை 3:
மூல மென் பொருளை , பைனரி யாக மாற்ற நமக்கு தலையங்க மென்பொருட்களான ஹெட்டர் (header files ) பையில்ஸ் தேவை. இவைகளை நிறுவ
$sudo apt-get install build-essential libmysqlclient-dev libmysql-ruby libsqlite3-ruby libsqlite3-dev
என்று கட்டளை ஐ நீங்கள் இடவேண்டும் .

நாம் ரெயில் பிரயாணம் செய்து இருப்போம், ரெயில்கள் செல்ல இருப்பு பாதை போட்டு இருப்பதை பார்த்து இருப்போம்,இந்த இருப்பு பாதைகள் ஜல்லி கற்கள் மேல் போடபட்டுயிருக்கும் .இந்த உண்மையின் பின்னால் ஒரு உவமை புனைந்து சில விடயங்களை அறிய முற்படுவோம் . தாங்கள் செய்யும் ரூபி ஆன் ரெயில்ஸ்யில் நிரல், ஒரு ரெயில் வண்டியை போன்றது , உங்கள் நிரல் ஒழுங்காய் ஓட இருப்பு பாதையாய் இருப்பது வலை தல ஆதார மென்பொருள் (வெப் சர்வர் - web server stack), இது தான் நமது டேவிட் ஹனிமேயர் ஹன்சன் எழுதிய ரெயில்ஸ் சட்டகம் (rails framework). இது இருப்பு பாதைக்கு இணையாக நான் ஒப்பிடுகிறேன் . மேலும் ரெயில்ஸ் என்னும் சட்டகம் பல சிறு சிறு மென் மாரலிகளின் உதவி கொண்டு வேலை செய்கிறது. இந்த சிறு சிறு மாரலியை நாம் ஜெம் என்று அழைக்கிறோம் . இந்த ஜெம்மை (மரகத கற்கள்) நான் ரெயில் பாதையில் இருக்கும் ஜல்லி கற்களுக்கு உவமை பாராட்டுகிறேன். ஆக நீங்கள் செய்யும் நிரல்கள் , ரெயில்ஸ் என்னும் இருப்பு பாதையில் ஜெம் என்னும் மரகத கற்களின் மேல் ஓடுகிறது.

ஜெம்மை நாம் நிறுவ வேண்டிய நேரம் வந்தாச்சு
நிலை 4:

பல ஜெம்க்களை நாம் நிறுவ நமக்கு உதவியை இருப்பது ரூபிஜெம்ஸ் என்னும் மாரலி. இதை இணையத்தில் இருந்து இறக்க
$wget http://rubyforge.org/frs/download.php/70697/rubygems-1.3.7.zip
பின்பு அதை உரிக்க
$unzip rubygems-1.3.7.zip
இப்போது rubygems-1.3.7 என்ற சப் டிரெக்டரி உருவாகி இருக்கும் , அதனுள் செல்லுங்கள்
$ cd rubygems-1.3.7
இப்போது நீங்கள் ஜெம் நிருவானை நிறுவலாம்
$ sudo ruby setup.rb

சில நிமிடங்களில் ஜெம் நிருவான் நிறுவப்பட்டு இருக்கும்.
ரூபி ஜெம்1.8 என்று நிறுவ பட்டு இருக்கம் ,
அதை ரூபி ஜெம் என்று வழி காட்ட ஒரு வழி காட்டான் ஐ நிறுவ ஒரு சிம் லிங்க் தொடர்ப்பை உருவாக்க வேண்டும்.

$sudo ln -s /usr/bin/gem1.8 /usr/local/gem

நிலை 5 :

இப்போது நீங்கள் ரெயில்ஸ் சட்டகம், ரெயில்ஸ் சட்டகத்து உரிதான மை. எஸ். க்யு. எல் என்னும் தொடர்பு மென்பொருளையும் மற்றும் மொங்க்றேல் என்னும் வெப் சர்வரையும் நிறுவ

$ sudo gem install rails mysql sqlite3-ruby mongrel
என கட்டளை இட வேண்டும்.

நிலை 6:
இப்போது சோதனை செய்து பார்க்க வேண்டிய நேரம்.

பின்வரும் கட்டளைகளை அப்படியே அடியுங்கள்

$rails my_blog
$cd my_blog
$rake db:create
$rake db:migrate
$script/server

உங்கள் உலாவியில் http://localhost:3000 என அடிக்கவும் , உங்கள் உலாவியில் வெல்கம் அபோர்ட் (Welcome aboard) என்ன ஆங்கிலத்தில் பார்த்தீர்களானால் வேலை முடிஞ்சிபோச்சு ..!!


தொடர்வோம் ,
நன்றி....

தியாகராஜன் சண்முகம்

Wednesday, July 25, 2007

ரூபி ஆன் ரெயில்ஸ்

அன்புக்குரியோர்களே, வணக்கம்,

ரூபி ஆன் ரெயில்ஸ் என்னும் இணைய பக்கங்கள் மற்றும் இணையகங்கள் உருவாக்க கூடி மாறலியை (Software programme) பற்றி உங்களிடம் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

ரூபி என்பது கணினி துறையில் ஒரு மென்மொழி.ரூபி மென்மொழியை இயற்றியவர் யோகிஹிரோ மேட்ஸுமோட்டோ. இவரை மேட்ஸ் என்றும் அழைப்பதுண்டு.ரூபி தன்னகத்தில் ஒரு மென்மொழியாக இருந்தாலும் அதனின் பரிநாம வளர்ச்சியால் மற்ற சமகால சட்டகத்தில் அதன் பிரவேசம் பரவியது.உதாரணத்திற்கு டாட் நெட் சட்டகத்தில் சி எல் ஆர் முறையில் அயன் ருபியாகவும் (iron ruby),ஜாவா உலகத்தில் ஜெ ரூபியாகவும் jruby, சுமால்டாக் வளாகத்தில் ரூபினியஸ் rubinius ஆகவும் பரந்து உள்ளது.

ஒரு காலகட்டத்தில் வீடு கட்ட கட்டிட தொழிலாளிகள், வீடு கட்டுமாணத்தை அரிசுவட்டில் ஆரம்பித்து கட்டிட வேலையை செய்து முடிப்பர்.தொழில்நுட்பம் வளர வளர உடனடி சுவர்கள் ,சன்னல்கள், வாயிற்கதவுகள்
சந்தையில் கிடைக்க பெற்றது.இதனால் வீடு கட்டுமாணம் வேகம் பெற்றுள்ளது. இந்த உவமையின் பின் தான் சட்டகத்தொழில் நுட்பத்தை நாம் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம்.நமது நிரலில் ஒரு கடவுச்சொல் சோதனையை (Password Authentication) செய்ய நாம் ஒவ்வொறு கட்டளையாக எழுதுவோம் என்றால் அது கட்டுமானதொழில் ஒரு தச்சர் மரத்தை வாங்கி அதை அறுத்து, கடைந்து,இழைத்து செய்வதற்கு ஒப்பாக நான் கருதுகிறன்.மாறாக கடைக்கு சென்று தனக்கு தேவையான அளவில் ஒரு சன்னலை வாங்கி கட்டிமுடிப்பதினால் வேலை சொற்ப காலத்தில் செய்துமுடிக்க படுகிறது.கடவுச்சொல் சோதனைக்காக சட்டகத்தில் எற்கனவே செய்யபட்ட குறு மாறலிகள் உபயோக நிலையில் (Production purpose) உண்டு.இதன் முலம் நிரல்கள் வேகமாக படைக்கமுடியும்.

நான் நிரல் படைக்கும் பொழுது எனக்கு ஒரு கூறுகிய சட்டத்திட்டத்தை தரும் சட்டகதொழில்நுட்பம் (Framework Technology) தேவையா?. திரைப்பட பாடல்களை பாருங்கள் பாடல்,ராகம்,சுவரம்,தாளத்தின் கோர்வையினால் இசை இன்புற இயலும், ஆக பாடல் , சுவரம்,ராகதாளத்தின் கோட்பாட்டினாலும் அடிப்படையினால் ஒன்று படுவதினால் இசை இன்பமாகிறது. இவை முரண்பட்டால் இசை வெறும் சத்தம்மாகிறது .ஆக சட்டதிட்டத்தின் பிடியில் இருக்கிறோம் என்று எண்ணாமல் ஒரு ஒழுக்கத்தின் காரணமாக அக்கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்வோமாக!.லிப்போ-கிராம்(Lipogram) என்பது ஒரு வார்த்தை வேண்டும் என்றே நீக்கி வரிகளை படைக்கும் வார்த்தை ஜால விளையாட்டு.ஆங்கலத்தில் abcd என்னும் சொற்களை நீக்கி ஒரு நுறு வார்த்தைகள் சொல்ல சொன்னால் நாம் யோசிப்போம், அதற்கு zero,one,two...ninety nine என நுறு வார்த்தைகள் உண்டு.ஆக எப்பொழது எல்லாம் நமக்கு ஒரு கட்டமைப்பில் குறுகிய நெருக்கடி வரும் பொழது நமது சமயோஜித புத்தி நமக்கு உதவுகிறது.

ரெயில்ஸ் என்பது ஒரு சட்டகம்(Framework). இதனை டேவிட் ஹனிமேயர் ஹன்சன் என்பவர் எழதினார்.இவர் கூகிளின் ஹக்கர் விருது -2005 பெற்றவர் என்பது குறிப்பிட தக்கது..டேவிட் தனது நிரலான பேஸ்கேம்பை ரூபியில் எழுதும் போது தனது நிரலில் இருந்து நிரலின் கட்டமைப்பு வசதி தரும் கட்டளைகளை பிரித்து எடுத்து இந்த சட்டகத்தை உருவாக்கினார். ஆக சில புரியாத தத்துவங்களை ஏட்டு சுரக்காய்யாய் பின்பற்றாமல் ஒரு நிஐ தேவையை பூர்த்திசெய்ய பிறந்து தான் ரெயில்ஸ் என்னும் சட்டகம்.

தொடர்வோம்....