Wednesday, July 25, 2007

ரூபி ஆன் ரெயில்ஸ்

அன்புக்குரியோர்களே, வணக்கம்,

ரூபி ஆன் ரெயில்ஸ் என்னும் இணைய பக்கங்கள் மற்றும் இணையகங்கள் உருவாக்க கூடி மாறலியை (Software programme) பற்றி உங்களிடம் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

ரூபி என்பது கணினி துறையில் ஒரு மென்மொழி.ரூபி மென்மொழியை இயற்றியவர் யோகிஹிரோ மேட்ஸுமோட்டோ. இவரை மேட்ஸ் என்றும் அழைப்பதுண்டு.ரூபி தன்னகத்தில் ஒரு மென்மொழியாக இருந்தாலும் அதனின் பரிநாம வளர்ச்சியால் மற்ற சமகால சட்டகத்தில் அதன் பிரவேசம் பரவியது.உதாரணத்திற்கு டாட் நெட் சட்டகத்தில் சி எல் ஆர் முறையில் அயன் ருபியாகவும் (iron ruby),ஜாவா உலகத்தில் ஜெ ரூபியாகவும் jruby, சுமால்டாக் வளாகத்தில் ரூபினியஸ் rubinius ஆகவும் பரந்து உள்ளது.

ஒரு காலகட்டத்தில் வீடு கட்ட கட்டிட தொழிலாளிகள், வீடு கட்டுமாணத்தை அரிசுவட்டில் ஆரம்பித்து கட்டிட வேலையை செய்து முடிப்பர்.தொழில்நுட்பம் வளர வளர உடனடி சுவர்கள் ,சன்னல்கள், வாயிற்கதவுகள்
சந்தையில் கிடைக்க பெற்றது.இதனால் வீடு கட்டுமாணம் வேகம் பெற்றுள்ளது. இந்த உவமையின் பின் தான் சட்டகத்தொழில் நுட்பத்தை நாம் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம்.நமது நிரலில் ஒரு கடவுச்சொல் சோதனையை (Password Authentication) செய்ய நாம் ஒவ்வொறு கட்டளையாக எழுதுவோம் என்றால் அது கட்டுமானதொழில் ஒரு தச்சர் மரத்தை வாங்கி அதை அறுத்து, கடைந்து,இழைத்து செய்வதற்கு ஒப்பாக நான் கருதுகிறன்.மாறாக கடைக்கு சென்று தனக்கு தேவையான அளவில் ஒரு சன்னலை வாங்கி கட்டிமுடிப்பதினால் வேலை சொற்ப காலத்தில் செய்துமுடிக்க படுகிறது.கடவுச்சொல் சோதனைக்காக சட்டகத்தில் எற்கனவே செய்யபட்ட குறு மாறலிகள் உபயோக நிலையில் (Production purpose) உண்டு.இதன் முலம் நிரல்கள் வேகமாக படைக்கமுடியும்.

நான் நிரல் படைக்கும் பொழுது எனக்கு ஒரு கூறுகிய சட்டத்திட்டத்தை தரும் சட்டகதொழில்நுட்பம் (Framework Technology) தேவையா?. திரைப்பட பாடல்களை பாருங்கள் பாடல்,ராகம்,சுவரம்,தாளத்தின் கோர்வையினால் இசை இன்புற இயலும், ஆக பாடல் , சுவரம்,ராகதாளத்தின் கோட்பாட்டினாலும் அடிப்படையினால் ஒன்று படுவதினால் இசை இன்பமாகிறது. இவை முரண்பட்டால் இசை வெறும் சத்தம்மாகிறது .ஆக சட்டதிட்டத்தின் பிடியில் இருக்கிறோம் என்று எண்ணாமல் ஒரு ஒழுக்கத்தின் காரணமாக அக்கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்வோமாக!.லிப்போ-கிராம்(Lipogram) என்பது ஒரு வார்த்தை வேண்டும் என்றே நீக்கி வரிகளை படைக்கும் வார்த்தை ஜால விளையாட்டு.ஆங்கலத்தில் abcd என்னும் சொற்களை நீக்கி ஒரு நுறு வார்த்தைகள் சொல்ல சொன்னால் நாம் யோசிப்போம், அதற்கு zero,one,two...ninety nine என நுறு வார்த்தைகள் உண்டு.ஆக எப்பொழது எல்லாம் நமக்கு ஒரு கட்டமைப்பில் குறுகிய நெருக்கடி வரும் பொழது நமது சமயோஜித புத்தி நமக்கு உதவுகிறது.

ரெயில்ஸ் என்பது ஒரு சட்டகம்(Framework). இதனை டேவிட் ஹனிமேயர் ஹன்சன் என்பவர் எழதினார்.இவர் கூகிளின் ஹக்கர் விருது -2005 பெற்றவர் என்பது குறிப்பிட தக்கது..டேவிட் தனது நிரலான பேஸ்கேம்பை ரூபியில் எழுதும் போது தனது நிரலில் இருந்து நிரலின் கட்டமைப்பு வசதி தரும் கட்டளைகளை பிரித்து எடுத்து இந்த சட்டகத்தை உருவாக்கினார். ஆக சில புரியாத தத்துவங்களை ஏட்டு சுரக்காய்யாய் பின்பற்றாமல் ஒரு நிஐ தேவையை பூர்த்திசெய்ய பிறந்து தான் ரெயில்ஸ் என்னும் சட்டகம்.

தொடர்வோம்....