Sunday, July 25, 2010

ரூபி ஆன் ரெயில்ஸ் ஐ நிறுவ செய்ய வேண்டியவைகள்

அன்பு இளவல்களே !!

வணக்கம் ,

இணையம் எப்படி வேலை செய்கிறது .. இது பற்றி மணிகண்டன் எழுதிய வலைதளத்தை பாருங்கள் ..
வலை விலாசம் : http://www.andhimazhai.com/news/viewmore.php?id=7246

ரூபி ஆன் ரெயில்ஸ் ஐ நிறுவ செய்ய வேண்டியவைகள்
இந்த வலை பதிவில் உள்ள வழி முறைகள் உபுண்டு 10.04 ஐ சார்ந்தது ...

ஒப்பன் எஸ்.எஸ்.எல் என்பது இணைய தளங்கள் மற்றும் இணையகதிற்கான தகவல் பரிமாற்றத்தை செய்ய பயன்படுத்தப்படும் சங்கேத மொழி. சர்வரில் இருந்து தகவல்கள் சிறு சிறு துண்டுகளாக மாற்ற படுகிறது. பின்பு அத்தகவல்கள் எளிதில் அறிய முடியாதவாறு கிரிப்டோ கிராபியின் (cryptography) மூலமாக உரு மாற்றம் அடைந்து இணைய பயன்பாட்டாளரை(client) வந்து அடைகிறது. பயன்பாட்டளர் தரும் தகவல்களும் இவ்வாறு மந்திர மொழிகளாக சர்வரை சென்று அடைகிறது.ஒப்பன் எஸ்.எஸ்.எல் 'C ' மென் மொழில் எழுதப்பட்ட ஒரு மென்பொருள் . ரூபியில் இந்த மென்பொருளை பயன்படுத்த இணைப்பு மென்பொருள் தான் 'libopenssl-ruby1.8'.

உடனுக்கு உடன் ரூபி கட்டளைகளை அறிய பயன்பெரும் மென்பொருள்தான் irb.ரூபி மற்றும் ரூபி-டேவ் (ruby and ruby-dev) மாரலியர்க்கான ரூபி மென்பொருட்கள் .
ரூபியின் கட்டளைகளை பற்றி அறிய உதவும் உரை(documentation) தான் ஆர் ஐ (ri ) மற்றும் ஆர் டாக் (rdoc).

இவைகளை நாம் நிறுவ தரவேண்டிய கட்டளைகள்

நிலை 1 :
$sudo apt-get install ruby ruby-dev libopenssl-ruby1.8 irb ri rdoc
இதன் பின் உங்கள் கடவு சொல்லை கணினி கேட்கும் .. அதை விசை பலகையில் அடியுங்கள் ..

நிலை 2 :
உங்கள் கண்ணினியில் முன்பே மை எஸ்க்யுஎல் (mysql ) நிறுவ பெற்றுருந்தால் நீங்கள் தரவேண்டிய கட்டளை
$sudo apt-get install libmysql-ruby sqlite3

ஒரு வேலை கணினியில் மை எஸ்க்யுஎல் (mysql ) நிறுவாமல் இருந்தால்
$ sudo apt-get install mysql-server sqlite3 libmysql-ruby

மை எஸ்க்யுஎல் (mysql ) நிறுவுகையில் முதன் முறையாக பயனர் பெயர் ,கடவு சொல் , சர்வரின் பெயர் கேட்கப்படும் , இவைகளை இணையத்தில் உள்ள உரைகளின் உதவியுடன் நிறுவவும், ஏதானும் ஐயதிற்கு எம்மை citizenofgnu@gmail.com என்ற மின் அஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளலாம்.

நிலை 3:
மூல மென் பொருளை , பைனரி யாக மாற்ற நமக்கு தலையங்க மென்பொருட்களான ஹெட்டர் (header files ) பையில்ஸ் தேவை. இவைகளை நிறுவ
$sudo apt-get install build-essential libmysqlclient-dev libmysql-ruby libsqlite3-ruby libsqlite3-dev
என்று கட்டளை ஐ நீங்கள் இடவேண்டும் .

நாம் ரெயில் பிரயாணம் செய்து இருப்போம், ரெயில்கள் செல்ல இருப்பு பாதை போட்டு இருப்பதை பார்த்து இருப்போம்,இந்த இருப்பு பாதைகள் ஜல்லி கற்கள் மேல் போடபட்டுயிருக்கும் .இந்த உண்மையின் பின்னால் ஒரு உவமை புனைந்து சில விடயங்களை அறிய முற்படுவோம் . தாங்கள் செய்யும் ரூபி ஆன் ரெயில்ஸ்யில் நிரல், ஒரு ரெயில் வண்டியை போன்றது , உங்கள் நிரல் ஒழுங்காய் ஓட இருப்பு பாதையாய் இருப்பது வலை தல ஆதார மென்பொருள் (வெப் சர்வர் - web server stack), இது தான் நமது டேவிட் ஹனிமேயர் ஹன்சன் எழுதிய ரெயில்ஸ் சட்டகம் (rails framework). இது இருப்பு பாதைக்கு இணையாக நான் ஒப்பிடுகிறேன் . மேலும் ரெயில்ஸ் என்னும் சட்டகம் பல சிறு சிறு மென் மாரலிகளின் உதவி கொண்டு வேலை செய்கிறது. இந்த சிறு சிறு மாரலியை நாம் ஜெம் என்று அழைக்கிறோம் . இந்த ஜெம்மை (மரகத கற்கள்) நான் ரெயில் பாதையில் இருக்கும் ஜல்லி கற்களுக்கு உவமை பாராட்டுகிறேன். ஆக நீங்கள் செய்யும் நிரல்கள் , ரெயில்ஸ் என்னும் இருப்பு பாதையில் ஜெம் என்னும் மரகத கற்களின் மேல் ஓடுகிறது.

ஜெம்மை நாம் நிறுவ வேண்டிய நேரம் வந்தாச்சு
நிலை 4:

பல ஜெம்க்களை நாம் நிறுவ நமக்கு உதவியை இருப்பது ரூபிஜெம்ஸ் என்னும் மாரலி. இதை இணையத்தில் இருந்து இறக்க
$wget http://rubyforge.org/frs/download.php/70697/rubygems-1.3.7.zip
பின்பு அதை உரிக்க
$unzip rubygems-1.3.7.zip
இப்போது rubygems-1.3.7 என்ற சப் டிரெக்டரி உருவாகி இருக்கும் , அதனுள் செல்லுங்கள்
$ cd rubygems-1.3.7
இப்போது நீங்கள் ஜெம் நிருவானை நிறுவலாம்
$ sudo ruby setup.rb

சில நிமிடங்களில் ஜெம் நிருவான் நிறுவப்பட்டு இருக்கும்.
ரூபி ஜெம்1.8 என்று நிறுவ பட்டு இருக்கம் ,
அதை ரூபி ஜெம் என்று வழி காட்ட ஒரு வழி காட்டான் ஐ நிறுவ ஒரு சிம் லிங்க் தொடர்ப்பை உருவாக்க வேண்டும்.

$sudo ln -s /usr/bin/gem1.8 /usr/local/gem

நிலை 5 :

இப்போது நீங்கள் ரெயில்ஸ் சட்டகம், ரெயில்ஸ் சட்டகத்து உரிதான மை. எஸ். க்யு. எல் என்னும் தொடர்பு மென்பொருளையும் மற்றும் மொங்க்றேல் என்னும் வெப் சர்வரையும் நிறுவ

$ sudo gem install rails mysql sqlite3-ruby mongrel
என கட்டளை இட வேண்டும்.

நிலை 6:
இப்போது சோதனை செய்து பார்க்க வேண்டிய நேரம்.

பின்வரும் கட்டளைகளை அப்படியே அடியுங்கள்

$rails my_blog
$cd my_blog
$rake db:create
$rake db:migrate
$script/server

உங்கள் உலாவியில் http://localhost:3000 என அடிக்கவும் , உங்கள் உலாவியில் வெல்கம் அபோர்ட் (Welcome aboard) என்ன ஆங்கிலத்தில் பார்த்தீர்களானால் வேலை முடிஞ்சிபோச்சு ..!!


தொடர்வோம் ,
நன்றி....

தியாகராஜன் சண்முகம்